News November 21, 2025
மடத்துக்குளம் அருகே நபர் செய்த காரியம்.. அதிர்ச்சி!

மடத்துக்குளம் சிஎஸ்ஐ சர்ச்சில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ஜார்ஜ் நெல்சன் (48). இவர் இரவு சர்ச்சுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
அவிநாசி அருகே விபத்து: 12 பேர் காயம்

சேலத்தைச் சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்களுடன், சபரிமலைக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு திருப்பூர் அவிநாசி அருகே வந்த போது இடதுபுற பின் பக்க டயர் வெடித்ததில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. இதில், 12 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் மத்திய போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு கந்தசாமி மற்றும் சிங்கராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
News November 24, 2025
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட சுண்டமேடு மற்றும் மும்மூர்த்தி நகர் பகுதிகளில் உள்ள மதுபான கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் மற்றும் கிரிநாத் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.


