News November 21, 2025

போலி ORS கலவைகளை உடனே அகற்ற FSSAI உத்தரவு

image

‘ORS’ என்று தவறாக விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்களை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்ற மாநிலங்களுக்கு, FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் WHO பரிந்துரைத்த மருந்து. எனவே, WHO அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் எனக்கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Similar News

News November 21, 2025

திமுகவின் டூல் கிட் விஜய்: அர்ஜுன் சம்பத்

image

விஜய் மீது திமுக நடவடிக்கை எடுக்க பயப்படுவதாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கரூர் விவகாரத்தில் தவெகவுக்கும், CBI-க்கும் வெட்கமே இல்லை என்றும் சாடினார். மேலும் திமுகவின் டூல் கிட் விஜய் என குறிப்பிட்ட அவர், கமலை திமுக பயன்படுத்தியது போல், 2026 தேர்தலில் விஜய்யை திமுக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். முன்னதாக, தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி இந்து மக்கள் கட்சி ECI-ல் மனு அளித்துள்ளது.

News November 21, 2025

மூளையை வசப்படுத்தும் செயல்பாடுகள்

image

மூளையை வசப்படுத்த, வாழ்க்கை முறையைச் சீராக வைத்திருப்பது அவசியம். கவனம், நினைவாற்றல், தெளிவான சிந்தனை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் மூலம், நம்மை நாமே வசப்படுத்தலாம். மூளை வசப்பட்டால், வானமும் வசப்படும். இதற்கு என்னென்ன செயல்பாடுகள் உதவுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 21, 2025

FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

image

ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. 1 சவரன் நேற்று ₹800 குறைந்த நிலையில், இன்று மேலும் ₹320 சரிந்துள்ளது. தற்போது சென்னையில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,460-க்கும், 1 சவரன் ₹91,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!