News November 21, 2025

கடலூர்: மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை

image

நெய்வேலியை சேர்ந்தவர் முனுசாமி (53). என்.எல்.சி-யில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மனவேதனையில் இருந்த முனுசாமி சரிவர பணிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விரக்தியில் முனுசாமி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 23, 2025

கடலூர் மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கடலூர் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் கடலோரப் பகுதியில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

BREAKING கடலூர்: மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலி

image

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராமத்தில் இன்று (நவ.23) மதியம் பெய்த கனமழையின் காரணமாக புளியமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததில், தங்களது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வனதாஸ், மரிய சூசை, பிளவ்மேரி ஆகியோர் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

error: Content is protected !!