News April 25, 2024
காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவிலின் நம்பிக்கை

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவில். மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் 2500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. பக்தர்களுக்கு சிவப்பு நிற துணிப்பை இக்கோவிலில் தரப்படுகிறது. பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.பின் 3 மாதங்களுக்கு பின் பையை அப்புறப்படுத்துவார்கள்.இதற்குள் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி மாணவர்களே தயார் ஆகுங்கள்!

காந்தி,நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி மாணவா்களுக்கு வருகிற நவ.12,13 ஆகிய தேதிகளில் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், காலை 9.30மணிமுதல் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதிபெற்று, பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: மாணவர்களே இதை மிஸ் பண்ணாதீங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற நவ.15 ஆகும். அனைத்து மாணவ மாணவிகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


