News November 21, 2025
நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துக: அன்புமணி

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
Sports Roundup: கால்பந்து தரவரிசையில் இந்தியா சறுக்கல்

*சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திற்கு சறுக்கல். * நவ.27-ம் தேதி நடைபெறவுள்ள WPL கிரிக்கெட் ஏலத்திற்கு 277 வீராங்கனைகள் பதிவு. *ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். *டி20-ல் 19 முறை ஆட்டநாயகன் விருது வென்று சிகந்தர் ராசா சாதனை. *ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்


