News November 21, 2025

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதுகுளத்தூர் மாணவி

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி மலர் என்ற மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இண்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவி ஜோதி மலர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Similar News

News November 24, 2025

JUST IN ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கா லோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராம்நாடு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

JUST IN ராமநாதபுரத்தில் எச்சரிக்கை.. மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், நாளை (நவ 24) விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!