News April 25, 2024
கடலூர்: சேலம்.. கடலூர் வரை நீட்டிப்பு

சேலத்திலிருந்து தினமும் புறப்படும் சேலம் – விருத்தாசலம் பாசஞ்சர் DEMU ரயில் (06122/06121) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை வரும் 3-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலத்தில் இருந்து விருத்தாசலம், ஊத்தங்கால் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் சந்திப்பை வந்தடைகிறது. முன்பு இந்த ரயில் சேலம் – விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
கடலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுப்பிரமணியர் இடப்பக்கம் மயில் மீது அமர்ந்து சம்ஹாரமூர்த்தி காட்சி தருகிறார். இக்கோயில் மிக அபூர்வமான திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு குழந்தை இல்லாதோர் வாரம்தோறும் தேன் அபிஷேகம் செய்து மனமுருகி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News January 13, 2026
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!
News January 13, 2026
கடலூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

கடலூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <


