News November 21, 2025
சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் தலைவர் கைது

சபரிமலையில் காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான <<17989986>>தங்கம் மாயமான வழக்கில்<<>>, ஏற்கெனவே 5 பேரை கைது செய்து கேரளா SIT விசாரணை நடத்தியது. இதில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேவசம்போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமாருக்கு SIT நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று நேரில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாலையில் SIT அவரை கைது செய்தது.
Similar News
News November 22, 2025
விஜய்யுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ முடிவு

தவெக – காங்., கூட்டணி உருவாகுமா என அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த <<18349738>>5 பேர் கொண்ட குழுவை<<>> காங்., அமைத்துள்ளது. இதன்மூலம், தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
News November 22, 2025
1 கிலோ அரிசியின் விலை ₹12,000 ரூபாயா!

Kinmemai என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து, சுவை இருக்கிறதாம். இதை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ₹12,000-க்கு விற்கப்படுவதால் இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உலகின் காஸ்ட்லியான அரிசி என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்துள்ளது.
News November 22, 2025
ஆபரேஷன் சிந்தூரால் சீனாவுக்கு லாபம்: USA

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.


