News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 24, 2025
சீமானுக்கு புதுச்சேரி திமுக கண்டனம்

புதுச்சேரி, திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, முறையாக பதில் கூறாமல் எஸ்ஐஆர் குறித்து கேள்வி எழுப்பிய கலைஞர் தொலைக்காட்சி நிருபர் மீது, தாக்குதல் நடத்திய சீமான் மற்றும் அவரது கூட்டத்திற்கு, புதுச்சேரி மாநில திமுக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
News November 24, 2025
புதுவை: இளம் பெண் தற்கொலை

புதுவை, முதலியார்பேட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, இவர் தனியார் பள்ளி ஆசிரியர், இவரது மூத்த மகள் பவித்ரா என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதி வந்தார். இந்தநிலையில் மேல்நிலை, இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர்.
News November 24, 2025
புதுச்சேரி: சீமான் மீது புகார் அளித்த நிருபர்

புதுச்சேரி வில்லியனூரில், நேற்று (நவ.23) நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட கலைஞர் டிவி நிருபர் ராஜீவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வில்லியனூர் காவல் நிலையத்தில் பத்திரிக்கை சங்க சக நிருபர்களுடன் சென்று நாம் தமிழர் கட்சி சீமான் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் அளித்துள்ளார்.


