News April 25, 2024
சென்னையில் ரவுடி வெட்டி கொலை

சென்னை: காசிமேடு எஸ்என் செட்டி சாலை அருகே இன்று தேசிங் என்ற ரவுடி படுத்திருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது தொடர்பாக காசிமேடு போலீசார் தேசிங்கின் பிரேதத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 30, 2026
சென்னை: உள்ளாட்சிகளுக்கு பெரும் நெருக்கடி

பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சுற்றி 1 கி.மீ. வரை கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட 16 கிராமங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், அனுமதிக் கட்டணமாக ரூ.1 – ரூ.20 லட்சம் வரை செலுத்திய விண்ணப்பதாரர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு உள்ளாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உத்தரவு வந்தபின் பணம் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
சென்னையில் இன்று இங்கெல்லாம் மின் தடை!

சென்னை, செம்பியம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, KKR எஸ்டேட், மிஸ்டிக் காலனி, KKR நகர், கல்கத்தா கடை, VOC தெரு, நவீன் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டிவிகே தெரு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் இருக்காது.
News January 30, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


