News April 25, 2024
நாமக்கல்: வரும் 30ல் இலவச பயிற்சி

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு, கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்கிற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Similar News
News November 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (நவ.22) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என நாமக்கல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
நாமக்கல் மக்களே ரெடியா?

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் மேலாளர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நேரில் தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து கல்வித் தகுதியுடையோர் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 21, 2025
திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்ட்டு மஞ்சிஹி (28) மற்றும் சோபியா (23) தம்பதி மொஞ்சனூர் அரசம்பாளையம் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையிலான தகராறுக்குப் பிறகு மஞ்சிஹி வேப்பமரத்தில் தூக்கிட்டு கொண்டார். மனைவி மீட்டாலும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


