News April 25, 2024

நாமக்கல்: ஆண் சடலம் மீட்பு!

image

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக இன்று காலை குமாரபாளையம் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தகவல் கூறினர். இது குறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி யார்? எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

இலவச லேப்டாப் மோசடி எச்சரிக்கை

image

தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025′ தொடர்பான விண்ணப்ப இணைப்புகளைக் (Link) கிளிக் செய்ய வேண்டாம் என நாமக்கல் மாவட்டக் காவல்துறை இன்று (நவம்பர் 21, 2025) சைபர் கிரைம் விழிப்புணர்வு மூலம் எச்சரித்துள்ளது. இது முற்றிலும் போலியான தகவல் என்றும், இந்த இணைப்புகளைத் திறந்தால் உங்கள் மொபைல் அல்லது கணினியின் தகவல்கள் திருடப்பட்டு பண மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News November 22, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 22, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.22) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 98-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த ஒன்றாம் தேதி ரூ.5.40- ஆக இருந்த முட்டை விலை, தற்போது வரை 70 காசுகள் உயர்ந்து ரூ.6.10- ஆக நீடித்து வருகிறது.

error: Content is protected !!