News April 25, 2024
இந்திரா காந்தி மட்டும் நகையைக் கொடுக்கவில்லை

நாட்டிற்காக இந்திரா காந்தி மட்டுமே நகைகளைக் கொடுக்கவில்லை, மக்கள் அனைவருமே நகைகளைக் கொடுத்தனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா – சீனா போர் (1962) நடந்த சமயத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்ததாக காங்கிரசார் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, போர் ஏற்பட்டதற்கு காரணமே நேருதான். காங்கிரசார் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News January 13, 2026
சூர்யா பட நடிகையை காதலிக்கும் சஹால்!

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியை காதலிப்பதாக காஸிப் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை சாஹல் விவாகரத்து செய்தார். பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்தாலும், தனது அழகால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த திஷா பதானி, தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
Credit card அதிகமா யூஸ் பண்றீங்களா? பெரும் சிக்கல்!

உங்கள் வருமானத்தை மீறி கிரெடிட் கார்டை வைத்து செலவு செய்தால் IT உங்களை கண்காணிக்கும். நண்பர்களுக்காக அதிக பணம் எடுப்பது, ஒரே நபருக்கு அதிக முறை பரிவர்த்தனை செய்வது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். IT இவற்றையெல்லாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதால் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உங்களுக்கு நோட்டீஸ் வரும். ஆதாரங்களைக் காட்ட முடியாவிட்டால், சட்டவிரோத பணப்பரிமாற்றமாக கருதப்படலாம்.
News January 13, 2026
BREAKING: விஜய்க்கு ஆதரவு கொடுத்தார் ராகுல் காந்தி

‘ஜன நாயகன்’ சென்சார் விவகாரத்தில் விஜய்க்கு ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு’ எனக்கூறி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக காங்., தலைவர்களை தொடர்ந்து, ராகுலும் ‘ஜன நாயகன்’ படத்தை தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என குரல் கொடுத்துள்ளது அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.


