News April 25, 2024

அம்பேத்கர் சிலை மீது குண்டு வீச முயற்சி

image

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 14, 2026

கடலூர்: தவெக நிர்வாகிக்கு கத்திவெட்டு

image

கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (41). தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதி செயலாளரான இவர் நேற்று இரவு கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர், அவரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெற்றிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 14, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜன.16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, 2 நாட்களுக்கு அனைத்து சில்லறை மதுபான கடைகளும், மனமகிழ் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!