News November 20, 2025

வேலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News November 27, 2025

வேலூர்: கடன் தொல்லையால் பெண் தூக்கு!

image

வேலூர், காட்பாடியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஜான்சி மேரி தனது 2 மகள்களின் உயர்கல்விக்காக கட்டணம் செலுத்த பலரிடம் கடன் வாங்கினார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, மேரியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால், மனஉளைச்சலில் இருந்த மேரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2025

வேலூர்: யுபிஎஸ்சி தேர்வு.. கலெக்டர் தகவல்!

image

வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, டிகேஎம் மகளிர் கல்லூரி ஆகிய 3 மையங்களில் 803 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் துணை ஆட்சியர் தலைமையில் 1 மொபைல் டீம், ஒவ்வொரு தேர்வுக்கூடத்துக்கு 5 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

வேலூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!