News November 20, 2025

தேனி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தேனி மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 28, 2025

தேனி: எலி மருந்து குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.!

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூவிகா (17). பள்ளி மாணவியான இவருக்கு கடந்த 21ம் தேதி பிறந்தநாள் நடைபெற்றது. பிறந்தநாள் நிகழ்விற்கு பெற்றோர்கள் புது துணி எடுத்து தராததால் பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.26) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News November 28, 2025

தேனி உதவி இயக்குநர்கள் பணி மாறுதல்

image

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) இருந்த எஸ்.அண்ணாதுரை தேனி மாவட்ட உதவி இயக்குநர் (தணிக்கை) பணிக்கும் அந்தப் பணியில் இருந்த சி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.முருகையா மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜ.உம்முள் ஜாமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2025

போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

image

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!