News April 25, 2024

சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை

image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 5,365 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று புதிய உச்சமாக 40.50 MU சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், இது மார்ச் 13இல் பதிவான 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

#BJPFearsJananayagan டிரெண்டிங்

image

சென்சார் விவகாரத்தில் ‘ஜன நாயகன்’ வெளியாகுவதில் சிக்கல் எழுந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். சென்சார் போர்டு மூலம் விஜய்க்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு பயம் என்ற பொருள்படும் வகையில் #BJPFearsJananayagan என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பதிவை பதிவிட்டுள்ளனர்.

News January 11, 2026

பள்ளி மாணவிக்கு குழந்தை.. 15 பேர் சிக்கினர்

image

திருச்சியில் 6 ஆண்டுகளாக உறவினர்களால் 16 வயது சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். முதல்முதலாக 2021-ல் 6-ம் வகுப்பு படிக்கும்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் தாத்தா, தாய்மாமா, அத்தை மகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவுப்படி, 15 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

error: Content is protected !!