News April 25, 2024
அலட்சியம் காட்டும் தனியார் பள்ளிகள்

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மறுபுறம், சில தனியார் பள்ளிகள் ஆர்டிஇ குறித்த சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால், 2022 – 23 கல்வியாண்டில் 95,946 ஆக இருந்த ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கை, கடந்த ஆண்டு 70,553 ஆக குறைந்துள்ளது.
Similar News
News January 15, 2026
IND vs PAK: உலகெங்கும் எகிறிய மவுசு!

டி20 WC-யில் IND vs PAK மோதும் போட்டி பிப்.15-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை தளமான BookMyShow செயலிழந்தது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முண்டியடித்ததால் சர்வர்கள் செயலிழந்துள்ளன. இது, இப்போட்டிக்கு உலக அளவில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
டெல்லியில் மனைவியுடன் SK பொங்கல் கிளிக்ஸ்

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதன்போது, கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை, ‘முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாட்டம்’ என்ற கேப்ஷனோடு ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையில் இந்த கியூட் கப்பிள்ஸ் எப்படி இருக்காங்க கமெண்ட் பண்ணுங்க.
News January 15, 2026
ஜனவரி 15: வரலாற்றில் இன்று

*இந்திய ராணுவ தினம். *1868 – நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயர் பிறந்தார். *1929 – அமெரிக்க புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். *1966 – நடிகை பானுப்ரியா பிறந்தார். *1981 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் காலமானார். *1986 – நடிகர் விக்ரம் பிரபு பிறந்தார். *2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. *2018 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் மறைந்தார்.


