News November 20, 2025
கடலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

கடலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News November 23, 2025
BREAKING கடலூர்: மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலி

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராமத்தில் இன்று (நவ.23) மதியம் பெய்த கனமழையின் காரணமாக புளியமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததில், தங்களது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வனதாஸ், மரிய சூசை, பிளவ்மேரி ஆகியோர் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News November 23, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.,23) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 48 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 44 மில்லி மீட்டர், சிதம்பரம் 42 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 39.3 மில்லி மீட்டர், வடக்குத்து 32 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 31 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 23, 2025
கடலூர்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<


