News November 20, 2025
மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரமில்லை: SC

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க 3 மாதங்கள் கெடு விதித்தது தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கான மனுவை SC-ன் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், அரசியல் சாசனத்தின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு 3 மாதங்களே அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
தொடர் விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையில் ஊருக்கு சொகுசாக போக எண்ணுபவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அரசு கொள்முதல் செய்துள்ள ‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்களை விரைந்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிச.20-ம் தேதிக்குள் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொகுசாக ஊருக்கு போக ரெடியா மக்களே!
News November 21, 2025
ரோடு ஷோவுக்கு வழிகாட்டுதல்கள் ரெடி

ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை மெட்ராஸ் HC-ல் TN அரசு சமர்ப்பித்துள்ளது. நிகழ்விடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும், அனுமதி விண்ணப்பத்தில் தலைமை விருந்தினர்களின் வருகை&புறப்படும் நேரத்தை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
News November 21, 2025
Bro Code டைட்டில்: குழப்பத்தில் ரவி மோகன்

ரவி மோகன் தயாரிக்கும் படத்திற்கு ‘Bro Code’ டைட்டிலை பயன்படுத்த தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதே விவகாரத்தில் மதுபான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் ‘Bro Code’ பெயரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் எந்த ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்ற குழப்பத்தில் ரவி மோகன் உள்ளார்.


