News November 20, 2025

திருவள்ளூர்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை 044-27667070 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 22, 2025

திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (21.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 21, 2025

திருவள்ளூர் மக்களே… ஞாயிறு ரயில் அட்டவணையே மாறுது!

image

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் நாளை மறுநாள் நவ 23 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

News November 21, 2025

அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

image

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!