News November 20, 2025
16 வயதுக்கு கீழ் இருந்தால் இனி No FB, Insta!

<<18255562>>ஆஸ்திரேலியாவில்<<>> சிறார்கள் SM பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் டிச.10 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் அடிப்படையில் Meta நிறுவனம், டிச.4 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய பயனர்கள் FB, இன்ஸ்டா, Threads தளங்களில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், 16 வயதானால் மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகளை காக்கும் இதுபோன்ற சட்டம் இந்தியாவிலும் வர வேண்டுமா? Comment.
Similar News
News November 24, 2025
ரயில்வே வேலை, டிகிரி போதும், 8,858 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <
News November 24, 2025
BREAKING: 22 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி வரை) 22 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நெல்லையில் கனமழையும், கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.


