News April 25, 2024
EVM-இல் எந்த மாற்றமும் செய்ய முடியாது

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவி என மூன்றுக்கும் தனித்தனி மைக்ரோ கன்ட்ரோலர்கள் உள்ளன. தேர்தல் முடிந்தபிறகு அந்த மூன்று கருவிகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆட்டிசம் வருமா?

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம் என டிரம்ப் கூறியிருந்தார். இவரது இந்த கூற்றுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு வலி (அ) காய்ச்சல் ஏற்படும்போதும் சிகிச்சை அளிக்காமல் விடுவது ஆபத்தில் முடியும். எனவே டாக்டர்களை கேட்டு பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 23, 2025
துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

கொச்சியில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பூட்டான் வழியாக சொகுசு கார்கள் கடத்தி வந்த புகாரில் காலை முதல் நடந்துவந்த சோதனை முடிவில், துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை தொடர்வதாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News September 23, 2025
பெண்களுக்கு ₹2 லட்சம் தரும் அரசு; விண்ணப்பியுங்கள்

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <