News November 20, 2025
தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.
Similar News
News November 21, 2025
தஞ்சை: சிறப்பு SIR முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தஞ்சையில் தொடரப்போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.25-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!