News April 25, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News January 20, 2026
மகளிர் உரிமைத் தொகை.. பேரவையில் HAPPY அறிவிப்பு

2021-ல் தொடங்கிய CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேரவையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
அப்போ 40 வயசானா அவ்ளோ தானா?

நீங்கள் 40 வயதை நெருங்குகிறீர்களா? கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? அப்படியென்றால் இச்செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஒரு காலத்தில் அனுபவம், திறமையின் உச்சமாக 40 வயது கருதப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையால் தற்போது 40 வயதை தொட்டாலே கார்ப்பரேட்டில் பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களை விட இளம் வயதினர் திறன்மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.


