News April 25, 2024
சபாநாயகர் புகாருக்கு இயக்குனர் பதில்

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியார் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததாக சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநர் பேரவை தலைவருக்கு இன்று பதில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
நெல்லை: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <
News January 9, 2026
நெல்லை: ரூ.1.32 கோடி மோசடி; மேலாளர் மீது வழக்கு

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்மேய்ப்பர் நகரில் உள்ள, வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவன அலுவலகத்தில் ரூபாய் 1,32,48,000 நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் மீது புகார் எழுந்தது. மண்டல செயல்பாட்டு மேலாளர் ஹரிஹரன் கொடுத்த புகாரில் நேற்று, தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
நெல்லை: விஷமருந்தி பெண் தற்கொலை செய்த சோகம்..

நெல்லை மாவட்டம், ஹரிகேசவநல்லூரை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி பேராட்சி வயது 65. இவர் உடல்நல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலமாகாததால் மன உளைச்சலில் இருந்த பேராட்சி நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கினார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


