News April 25, 2024
இளையராஜா மட்டுமே உரிமை கோர முடியாது

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜா இசையமைத்த 4,500 பாடல்கள் மீதான சிறப்பு உரிமையை எதிர்த்து, எக்கோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாடல்கள் ஏதேனும் விற்கப்பட்டிருந்தால் அது இந்த மேல்முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்து வழக்கை ஜூன் 2ஆவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Similar News
News January 7, 2026
சென்னை: 12 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!

சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து இன்று (ஜன. 7) சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். விமல் மாம்பலம் காவல் நிலைத்தில் இருந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், விஜயகாந்த் மெரினா கடற்கரையில் இருந்து மாம்பலம் காவல் நிலையத்துக்கும், ராஜ் பிரபு மெரினா காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
மகனின் பெயரை அறிவித்த நட்சத்திர ஜோடி!

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கத்ரீனா கைஃப்-விக்கி கெளஷல் ஜோடிக்கு, கடந்த நவ.7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்கு விஹான் கெளஷல் என பெயரிட்டுள்ளதாக SM-ல் அவர்கள் அறிவித்துள்ளனர். குழந்தையின் பிஞ்சு கையை பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான போட்டோவையும் பகிர்ந்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விஹானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News January 7, 2026
வாட்டர் ஹீட்டர்.. சகோதரிகள் இறந்து போனார்கள்

வாட்டர் ஹீட்டர் ராடை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரும்பு பக்கெட்டை தவிர்த்துவிட்டு பிளாஸ்டிக் பக்கெட்டை மட்டுமே பயன்படுத்துங்கள். அதேபோல், ஹீட்டர் ராடு சூடாகும் போது தண்ணீரை தொடாதீர்கள். உ.பி.,யில் அண்மையில், ஹீட்டர் ராடை தெரியாமல் தொட்ட லட்சுமி மற்றும் நிதி என்ற சகோதரிகள் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், நிபுணர்களின் ஆலோசனைகள் SM-ல் வைரலாகின்றன.


