News November 20, 2025
கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? ALERT!

கடைகளில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் நிறைய எண்ணெய், உப்பு மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதில் இஞ்சி பூண்டுக்கு பதிலாக, மைதா மற்றும் பிற பொருள்களை பயன்படுத்துவார்கள் எனவும் இதனால் ஜீரணம் சார்ந்த பிரச்னைகள், ஃபுட் பாய்சன், அழற்சி போன்ற உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
Similar News
News November 22, 2025
காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
News November 22, 2025
தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: கனிமொழி

ஒவ்வொரு மசோதாக்களின் மூலமாகவும் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு சரியான நிதி பகிர்வை வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மெட்ரோ உள்பட நமக்கு வரவேண்டி ரயில் திட்டங்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், அதனை எதிர்த்து திமுக போராடுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 22, 2025
வரலாற்றில் இன்று

➤1939 – உ.பி Ex CM முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.
➤ 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் தொடங்கியது.
➤1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
➤ 1995 – உலகின் முதலாவது கணினி அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி வெளியானது.
➤ 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


