News April 25, 2024
கடலூரின் வெள்ளி கடற்கரை சிறப்பு

கடலூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்த வெள்ளி கடற்கரை இருப்பினும், இதனால் நகரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஆசியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றாக வெள்ளி கடற்கரை விளங்குகிறது. கடற்கரைக்கு தெற்கில், தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கும். இக்கடற்கரையில் நூற்றாண்டுக்கும் பழமையான கலங்கரைவிளக்கம் உள்ளது. மேலும் பழமையான செயின்ட் டேவிட் கோட்டை கடற்கரைக்கு அருகில் உள்ளது.
Similar News
News January 15, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் பைக் மோதி 2 பேர் பலி

ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி (40). இவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தனது மகனை அழைத்து கொண்டு தன்னுடன் ஹோட்டலில் வேலை செய்யும் சிவராஜ் (37) என்பவருடன் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது புதுக்கூரைபேட்டை அருகே டூவீலர் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் தடுப்பு கட்டை மீது விபத்துக்குள்ளானது. இதில் ரங்கநாயகி, சிவராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
News January 15, 2026
கடலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! APPLY பண்ணுங்க!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


