News April 25, 2024

பறவைக் காய்ச்சல் காரணமாக எல்லையில் கடும் சோதனை

image

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

என்கிட்டயேவா.. தக் பதில் கொடுத்த மோகன்லால்

image

மோகன்லாலின் கவுண்ட்டர் பதில்களுக்காகவே அவரது நேர்காணலை பலரும் பார்ப்பதுண்டு. அப்படித்தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ‘தாதா சாகேப் பால்கே’ விருது குறித்தும் கலகல பதிலை அளித்துள்ளார். ஒரு நடிகருக்கான உயரிய விருதே கிடச்சாச்சு, இதுக்கு மேல சாதிக்க ஒன்னுமில்ல, இனி எதுக்கு நடிப்பை தொடருறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு, ஐயோ அப்டியா, எனக்கு நடிப்ப தவிர எதுவும் தெரியாது, இனி நான் என்ன செய்வேன் என பதிலளித்தார்.

News September 23, 2025

SETC பஸ்களில் இனி குடிநீர் விற்பனை

image

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் (SETC) மூலம் சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்யும்போது குடிநீர் பாட்டில் விநியோகம் செய்ய SETC திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

News September 23, 2025

விசித்திரமான இடங்கள்

image

உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவை இயற்கை அற்புதங்களாகவும், மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. சில இடங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. அவற்றில் சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் விசித்திரமான இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!