News November 20, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படிஇரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News November 21, 2025
சங்ககிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம்: விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு!

சேலத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேலத்தில் டிச.4-ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. கார்த்திகை தீப பணிகள் இருப்பதால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.