News April 25, 2024

தஞ்சை: பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி 2 பேர் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்கள் ஜெகன்(30), பாக்யராஜ்(39). இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.23) பைக்கில் தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, வேம்பக்குடி அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News January 13, 2026

தஞ்சை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவரது வீட்டில் கடந்த கடந்த 4.7.2025 அன்று கதவை உடைத்து உள்ளே புகுந்த அமர்நாத் (24), சுகுமார் (28) ஆகியோர் வீட்டில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கு நேற்று தஞ்சை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News January 13, 2026

தஞ்சை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய நாட்களில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் இயங்காது என்றும், இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர்!

error: Content is protected !!