News April 25, 2024
ஏடிஎம் கொள்ளை- ஒருவர் கைது

செங்குன்றம், ஜி.எல்.பி புறவழிச்சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய செங்குன்றம் போலீசார் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 26, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (25/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 25, 2025
திருவள்ளூர் எம்பி முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிட்டு உள்ள செய்தியில்; “உங்கள் குரல் முக்கியமானது” என்ற தலைப்பில் மக்கள் குறைகள் அல்லது பரிந்துரைகளை தெரிவிக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்து தெரிவிக்கலாம். மேலும் உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண்ணையும் கட்டாயம் சேர்க்கவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

திருவள்ளூர் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.