News November 20, 2025

பழைய காலத்து பெருமை பேசக்கூடாது: கி.வீரமணி

image

அகில இந்திய கட்சி என பழைய காலத்து பெருமை எல்லாம் இப்போது பேசக்கூடாது என்று கி.வீரமணி கூறியுள்ளார். இன்றைய யதார்த்தம் மாநிலக் கட்சிகளை சார்ந்துதான் உள்ளது என்ற அவர், ராகுல் காந்தி பிஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாலும், அம்மாநில காங்., நிர்வாகிகள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் சாடியுள்ளார். கி.வீரமணியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News November 20, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலால் கிராம உதவியாளர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட, சிவனார்தாங்கள் கிராம உதவியாளராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்று (நவ.20) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அப்பகுதி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 20, 2025

கவர்னரை கருணாநிதி பதிலால் சாடிய கனிமொழி

image

மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என SC கூறியது. இந்நிலையில், உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது? என்று கேட்டபோது, கவர்னர் வேலை பார்ப்பது என்று முன்னாள் CM கருணாநிதி கூறியதாக கனிமொழி மேற்கோள் காட்டியுள்ளார். இனியாவது அரசமைப்புக்கு உட்பட்டு கவர்னர், தனது பணியை செவ்வனே செய்வார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

SC அளித்தது தீர்ப்பு அல்ல: P.வில்சன்

image

நியாயமான காலத்துக்குள் மசோதா மீது கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என <<18341479>>SC<<>> இன்று கூறியது. இதற்கு முன்பு, 3 மாதங்களுக்குள்ளாக ஒப்புதல் வழங்க வேண்டும் என SC தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இன்று SC கூறியது கருத்து மட்டுமே, உத்தரவோ தீர்ப்போ அல்ல என்று திமுக வழக்கறிஞர் P.வில்சன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் SC ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!