News November 19, 2025

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு: கீர்த்தி

image

துபாய், USA நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு முன்புவரை ட்ரோல்களை தான் பார்த்ததே இல்லை என்ற அவர், இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என் வேலையை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். கீர்த்தியின் பேச்சுக்கு உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 21, 2025

தூதுக்குடியில் இணைந்த 12 புதிய ஊராட்சிகள்

image

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News November 21, 2025

2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

News November 21, 2025

BREAKING: விலை ₹7,000 குறைந்தது

image

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

error: Content is protected !!