News April 25, 2024
சென்னை ஏர்போர்ட்டில் 11 கிலோ ஹெராயின் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.24) தோகாவில் இருந்து வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒருவரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 18, 2026
சென்னை: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
சென்னையில் 100 டிஜிட்டல் போர்டு!

காற்று மாசு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் போர்டு அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த போர்டில் காற்றின் தரம், வெப்பநிலை, மழை அளவு என 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும். இதற்காக ரூ.6.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட நுழைவுவாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
News January 18, 2026
சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.19) ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி வியாசர்பாடி, செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், ராதாகிருஷ்ணன் நகர், கே.வி.டி., தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் ஆகும்.


