News November 19, 2025

நகைக்கடன் வாங்குவோருக்கு… HAPPY NEWS

image

கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 கடன் வழங்கப்பட்டு வந்தது. இதை ₹7,000 ஆக உயர்த்தி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனாலும், வங்கிகளில் பழைய தொகைக்கு மேல் கடன் வழங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடன் தொகையை உயர்த்தி வழங்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து நகைக்கடன் தொகை உயரும். SHARE IT

Similar News

News November 23, 2025

இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

image

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்

News November 23, 2025

உசைன் போல்ட் பொன்மொழிகள்

image

*உங்களுக்கென்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டாம். *உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள் *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.

News November 23, 2025

ஸ்மிருதியின் காதல் வைபோகம் PHOTOS

image

2 நாள்களாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் காதல் காட்சிகளே இணையத்தில் வைரலாகியுள்ளது. லவ் ப்ரொபோஸ், நிச்சய அறிவிப்பு, ஹல்தி நிகழ்ச்சி என இருவருக்கும் இடையேயான காதல் பொங்கி வழிய, பதிலுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போட்டோஸை சக இந்திய வீராங்கணைகள் பகிர அதுவும் லைக்குகளை குவித்து வருகிறது.

error: Content is protected !!