News November 19, 2025
கடலூர்: 20,837 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

கடலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2024 -25 ஆம் ஆண்டில் ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் 20,837 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: கடலூரில் இன்று விடுமுறை அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் கடலூர் மாவட்டத்தில் சிதம்ரம். ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் 332 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 128 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று தெரிவித்துள்ளார். இதில், 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 15 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (23/11/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


