News November 19, 2025
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் வருகின்ற நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
தேனி: பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கூடலூரை சேர்ந்தவர் பாக்கியம் (60). இவர் நேற்று (நவ.20) அவரது உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து வீரபாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். உப்பார்பட்டி விளக்கு அருகே பைக் வந்து கொண்டிருந்த போது திடீரென பாக்கியம் மயங்கி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.
News November 21, 2025
தேனி: ரிப்போட்டருக்கு கொலை மிரட்டல்

போடி பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் போடியை சேர்ந்த மணிமாறன் (52), என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மணிமாறன் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி போலீசார் மணிமாறன் மீது வழக்கு (நவ.20) பதிவு.


