News November 19, 2025
திருவள்ளூர் தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 24, 2025
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 24, 2025
திருவள்ளூர்: ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு தாலுகா நொச்சி தலையாரி காலனியைச் சேர்ந்த இவர், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த பொதட்டூர் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
News November 24, 2025
திருவள்ளூர்: 13 வயது சிறுவன் துடிதுடித்து பலி!

ஆவடியில் ஹரிஹரன் (13) என்ற சிறுவனின் வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் குழந்தைக்காக தூளி கட்டப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஊருக்குச் சென்ற பிறகும், ஹரிஹரன் அந்தத் தூளியில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனால் பெற்றோரும் தூளியை அகற்றாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வழக்கம்போல் ஹரிஹரன் தூளியில் சுற்றி விளையாடும்போது, கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.


