News April 25, 2024
3வது இடம் பிடித்த சேலம்!

இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான இடங்களில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் நேற்று(ஏப்.23) அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடை காலம் ஆரம்பித்து வெயில் கொளுத்தும் நிலையில் ஆங்காங்கே வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி நாட்டிலேயே வெப்பநிலையில் ஈரோடு 3வது இடம்(நேற்று முன்தின நிலவரப்படி) பிடித்திருந்த நிலையில், சேலம் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.
Similar News
News February 5, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,
சேலம் மாவட்டத்தில் பிப்.5-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
News February 5, 2026
சேலம் வனக் கோட்டத்தில் 24 அரிய வகை பறவைகள்

சேலம் வனக்கோட்டம் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ் பேட்டை, சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப் பகுதியில் முதன்முறையாக இரைக்கொல்லிப் பறவைகள் கணக்கெடுப்பு இரு தினங்கள் நடைபெற்றது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பில், ராஜாளி, வல்லூறு, பருந்து, ஆந்தைகள் உள்ளிட்ட 24 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி காசியப் தெரிவித்துள்ளார்.