News November 19, 2025
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருவரா நீங்கள்?

தி.மலை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 22, 2025
தி.மலை: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 22, 2025
தி.மலை: தொடரும் அவலம்; அலைக்கழிக்கப்படும் மக்கள்!

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார், சாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பழங்குடியின மக்கள் பெறும் வகையில் SC/ST நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆதார் பெற வந்த இருளர் மக்களிடம், ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழ் தேவை என கூற, ஆதார் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் வழங்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.


