News April 25, 2024

நெல்லை: காதலர்களிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த மூவரை போலீசார் இன்று(ஏப்.24) கைது செய்தனர். காதல் ஜோடியான திருவாரூரை சேர்ந்த இளைஞரும் வள்ளியூர் பகுதியை சேர்ந்த பெண்ணும் நேற்று(ஏப்.23) வள்ளியூர் முருகன் கோயிலுக்கு சென்றனர். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்த மூவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

Similar News

News January 18, 2026

நெல்லை : தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

நெல்லை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 18, 2026

நெல்லை: பொங்கல் விழாவில் இரு தரப்பினர் மோதல்!

image

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெற்கு தெரு அருகே பொங்கல் விழா போட்டி நடத்தி பரிசு வழங்குவதில் இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மந்திரமூர்த்தி(37) மற்றும் அருள்ராஜ்(46) ஆகிய இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 7 நபர்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!