News April 25, 2024
டிரை ஐஸ் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக் கூடாது. இதை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்த அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
Similar News
News January 17, 2026
விஜய் படம் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘ஜன நாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனதால் ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஜன.23-ல் ’தெறி’ ரீரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான டிரெய்லர் நாளை ரிலீஸாகிறது. இதன்மூலம் அதே நாளில் ரீரிலீஸாகவுள்ள ‘மங்காத்தா’ படத்துடன் தெறி மோதுகிறது. இதனால் விஜய் – அஜித் ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர். என்னப்பா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிடலாமா?
News January 17, 2026
Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வயதானவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகள்கூட பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே இந்நோய் உங்களுக்கு வராமல் இருக்க/நோயில் இருந்து விடுபட மேலே போட்டோக்களில் காட்டப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். பிறருக்கு இதை தவறாமல் SHARE செய்யுங்கள்.
News January 17, 2026
மாயமான விமானம்… 11 பேர் பலியா?

இந்தோனேசியாவின் ATR 42-500 ரக விமானம் இன்று மாயமாகியுள்ளது. மதியம் 1:17 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது எனவும், அதன் கடைசி சிக்னல் Makassar என்ற பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் பெறப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விபத்துக்குள்ளானதை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அதில் பயணித்த 14 பேரின் நிலைமை தற்போது கேள்வி குறியாகியுள்ளது.


