News April 25, 2024
கறிக்கோழி, முட்டை கொண்டு வர தடை

கேரளாவில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அங்கு பறவை காய்ச்சல் வைரஸ் கிருமி பரவி உள்ளது உறுதியானது. இதனால் அப்பண்ணைகளில் வளர்ந்த கோழி, வாத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தேனி மாவட்டம் வழியாக வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழிகள், வாத்துக்கள், தீவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
தேனி மக்களே கந்துவட்டி தொல்லை; இனி இல்லை..

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News January 5, 2026
தேனி: துணியால் கழுத்து இறுகி.. சிறுமி உயிரிழப்பு

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 8 வயது மகளான கவின்யா நேற்று (ஜன.4) அவரது தாயாரின் சால் துணியால் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென துணி சிறுமியின் கழுத்தில் இறுக்கிய நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். சிறுமியை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 5, 2026
தேனி: வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி

ஆண்டிபட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரிடம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன் (77) என்பவர், தான் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி என்று ராம்குமாரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக, ஆவணத்தை போலியாக கொடுத்து ரூ.2.50 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


