News November 19, 2025
BREAKING: பதவியை பறித்தார் ஸ்டாலின்

கோவை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து, ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே, அதிமுகவினருடன் மகாலிங்கம் தொடர்பில் இருந்துள்ளார். இன்று நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின்போது, இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உடனே அவரின் கட்சிப் பதவியை, ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும், பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
இதெற்கெல்லாமா தற்கொலை.. இளம்பெண் சோக முடிவு

சில தற்கொலை செய்திகளை படிக்கும்போது, உயிரை மாய்த்துக் கொள்ள இதெல்லாமா காரணம் என தோன்றும். அப்படியான சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இளம் டாக்டர் பிரின்ஸி(23), வீட்டில் பூனை ஒன்றை வளர்த்துள்ளார். திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, பூனைதான் அதற்கு காரணம் என பெற்றோர் எண்ணினர். இதனால், பூனை வளர்க்க வேண்டாம் என பெற்றோர் கூறியதால், பிரின்ஸி விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை தீர்வல்ல!!!
News March 22, 2026
IPL வரலாற்றிலேயே முதல் முறையாக.. அடடா!

IPL-ல் 18 சீசன்களுக்கு பிறகு முதல் முறையாக, இந்த சீசனில் தான் எல்லா அணிகளையும் இந்திய வீரர்களே கேப்டனாக வழிநடத்தவுள்ளனர். ரஜத் படிதார்(RCB), ஸ்ரேயஸ்(PBKS), பராக்(RR), ஹர்திக்(MI), ருதுராஜ்(CSK), அக்சர்(DC), கில்(GT), ரஹானே(KKR), பண்ட்(LSG), இஷான்(SRH) ஆகியோர் கேப்டனாக உள்ளனர். கடைசியாக 2019-ல் மட்டும் தான், அதுவும் சீசனுக்கு நடுவில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இது நிகழ்ந்தது.
News March 22, 2026
திமுக கூட்டணி உடைந்தது.. அடுத்தடுத்து பரபரப்பு

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த வேல்முருகன், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறி அவர் குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பழைய வழக்கை தூசி தட்டி எடுத்து தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


