News November 19, 2025
World Roundup: USA-Saudi அணுசக்தி ஒப்பந்தம்!

*சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்ப் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. *தெற்கு ஜப்பானில் உள்ள கடற்கரை நகரில் 170-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது *<<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை டிரம்ப் திட்டியதால் சர்ச்சையானது *ஆஸ்திரேலியாவில் 8 மாத இந்திய கர்ப்பிணி பெண் மீது கார் மோதியதில் பலியானார்.
Similar News
News March 21, 2026
தேர்தல் தேதி அறிவித்தும் களைகட்டாத அரசியல் களம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை இன்னும் துரிதப்படுத்தவில்லை. வேட்புமனு தாக்கலுக்கே 2 வாரங்கள் உள்ளதால், அதற்காக இப்போதே ஏன் செலவு செய்ய வேண்டும் என்று கட்சியினர் நினைக்கின்றனராம். அத்துடன், கூட்டணி பங்கீடு முழுமையடையாத நிலையில் திமுக, அதிமுக சிட்டிங் MLA-க்கள் கூட, தங்களுக்கு சீட் கிடைப்பதில் சந்தேகம் கொள்வதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2026
கூட்டணி: வேதனையுடன் திருமா முடிவை அறிவித்தார்

தவாக, CPM-ஐ தொடர்ந்து, திருமாவும் திமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய திருமா, திமுக கூட்டணியில் சொற்ப தொகுதிகள் தான் கிடைப்பதாக வெளிப்படையாக வேதனையை தெரிவித்துள்ளார். கட்சியினர் சீட் கேட்டு தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற நிலை தொடர்வதாகவும், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் எனவும் உறுதிப்பட அறிவித்துள்ளார்.
News March 21, 2026
துரைமுருகனுக்கு இனி அமைச்சர் பதவி கிடையாதா?

வயோதிகம் & உடல்நிலையை கருத்தில்கொண்டு அமைச்சர் துரைமுருகனை தேர்தலிலிருந்து விலக்க திமுக முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனிடையே, உதயநிதியை துரைமுருகன் சந்தித்த நிலையில், இந்த முறை மட்டும் கடைசியாக அவருக்கு சீட் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்ற முடிவிலும் கட்சித் தலைமை உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


