News April 25, 2024
சாதிவாரி கணக்கெடுப்பில் மோடியின் இரட்டை நிலைப்பாடு

பிரதமர் நேரத்திற்கு தகுந்தாற்போல் நிலைப்பாடுகளை மாற்றுவதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்கள் அனைவரும் ஓபிசி என்று கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பேச்சு வந்ததும் சாதியே இல்லை என பிரதமர் மாற்றிப் பேசினார். பிறகு, ஏழை, பணக்காரன் என்ற சாதி மட்டுமே உள்ளதாக அதையும் திரித்துக் கூறினார். அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பேசி மக்களைத் தொடர்ந்து குழப்புவதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
Similar News
News January 7, 2026
மகனின் பெயரை அறிவித்த நட்சத்திர ஜோடி!

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கத்ரீனா கைஃப்-விக்கி கெளஷல் ஜோடிக்கு, கடந்த நவ.7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்கு விஹான் கெளஷல் என பெயரிட்டுள்ளதாக SM-ல் அவர்கள் அறிவித்துள்ளனர். குழந்தையின் பிஞ்சு கையை பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான போட்டோவையும் பகிர்ந்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விஹானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News January 7, 2026
வாட்டர் ஹீட்டர்.. சகோதரிகள் இறந்து போனார்கள்

வாட்டர் ஹீட்டர் ராடை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரும்பு பக்கெட்டை தவிர்த்துவிட்டு பிளாஸ்டிக் பக்கெட்டை மட்டுமே பயன்படுத்துங்கள். அதேபோல், ஹீட்டர் ராடு சூடாகும் போது தண்ணீரை தொடாதீர்கள். உ.பி.,யில் அண்மையில், ஹீட்டர் ராடை தெரியாமல் தொட்ட லட்சுமி மற்றும் நிதி என்ற சகோதரிகள் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், நிபுணர்களின் ஆலோசனைகள் SM-ல் வைரலாகின்றன.
News January 7, 2026
முட்டை விலை குறைந்தது

டிசம்பரில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை, ஜனவரியில் படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாள்களில் 40 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 20 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கல்லில் தற்போது 1 முட்டையின் கொள்முதல் விலை ₹5.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இனி விலை குறைய வாய்ப்புள்ளது.


