News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News April 3, 2026
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி பலி

தஞ்சாவூர் அருகே மாப்பிள்ளை நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை லட்சிதா மீது பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் திவாரி (36) என்பவர் ஓட்டி வந்த கார் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News April 3, 2026
தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News April 3, 2026
தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


