News April 25, 2024
கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் சிறப்பு

அரியலூர் ஜெயங்கொண்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இதன் கோபுரம் 160 அடி உயரம் கொண்டது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக அமைத்து இக்கோவிலைக் கட்டினார். தஞ்சை பெருவுடையார் கோவிலை ஒத்த அமைப்புடன் இது கட்டப்படுள்ளது.இக்கோவிலை ஐக்கியநாடுகள் அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது சிறப்பிற்குரியது
Similar News
News January 13, 2026
அரியலூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

அரியலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 13, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை ஒட்டிய பார்கள் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினமான 16-ம் தேதியும்; குடியரசு தினமான 26-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
அரியலூர்: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

அரியலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


